இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!!

இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளில் மண் சரி ஏற்படும் ஆபத்து இருப்பதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவனம் முதல் கட்ட மஞ்சள் எச்சரிக்கை அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இரத்தினபுரி,எகலியகொடை,எலபாத, குருவிட்ட,ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகள்,கேகாலை மாவட்டத்தின் ருவான்வெல,பிரதேச செயலாளர் பிரிவு என்பவற்றுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நிலத்தில் வெடிப்புகள் ஏற்படுதல்,திடீரென ஏற்படும் நீர் ஊற்றுகள் தொடர்பான விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.இதனிடையே நாட்டில் இடைக்கால பருவமழை பெய்ய வாய்புள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய, சபரகமுவை மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை, மன்னார், வவுனியா, குருணாகல் மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் ஆங்காங்கே மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.