இலங்கையில் புதிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு!! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!!!

பேலியகொட மீன் சந்தை தொற்றாளிகளின் இணைப்புக்களில் புதிய தொற்றாளிகள் கண்டறியப்படுவது அதிகரித்துள்ளதாக சிரேஸ்ட தொற்று நோயியல் நிபுணர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

தொற்றாளிகள் நாடு முழுவதிலும் இருந்து கண்டறியப்படுகின்றனர். இந்தநிலையில் நாடு முழுவதும் இந்தநோய் தொற்று ஏற்பட்டுள்ளதை காணமுடிகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதற்கிடையில் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை கொரோனா தொற்றாளிகளின் இணைப்புக்களில் புதிய தொற்றாளிகள் கண்டறியப்படுவது குறைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, கம்பஹாவிலும் கொழும்பு மாநகர சபை பிரதேசத்தில் இருந்தும் அதிகளவான தொற்றாளிகள் எதிர்காலத்தில் கண்டறியப்படுவார்கள் என்று எதிர்பார்பதாக அவர் தெரிவித்துள்ளார்.இச்சூழ்நிலையில் பொதுமக்கள் கவனமாக செயற்படவேண்டியது அவசியம் என்று சுதத் சமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.