இலங்கை மக்களுக்கு பேரதிர்ச்சி தரும் செய்தி…கொரோனா பரவல் குறித்து சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு..!!

கொரோனாவின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவதற்கு, இரண்டு மாதத்திற்கும் அதிக காலம் எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதர அமைச்சின் பொது சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.இதேநேரம், நாட்டில் கொரோனா வைரஸ் பரவலானது, ஓரளவு அபாயநிலையில் உள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர், வைத்தியர் ஜயருவன் பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.தென்னிலங்கை தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும், இலங்கையில் இதுவரையில் கொரேனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 744 ஆக அதிகரித்துள்ளது.மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணிகளில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 8,000 ஐ கடந்துள்ளது.நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை 409 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.