எல்லைகளிலுள்ள இரகசிய முகாம்களில் உணவுக்கு வழியின்றி கொடுமைப்படுத்தப்படும் கொரோனா நோயாளிகள்.!! வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்.!

வடகொரியாவில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கென இரகசிய முகாம்கள் செயல்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குறிப்பாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள இரகசிய முகாம்களில் கொரோனா வைரஸ் நோயாளிகள் கொடுமைப்படுத்தப்படுவதாகவும், பெரும்பாலான முகாம்களில் நோயாளிகள் உணவின்றி அவதிப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக இதுவரை கிம் ஜாங் அரசு மறுப்பு தெரிவித்து வந்தாலும், அங்குள்ள நிலைமை மிகவும் மோசமாகவும் கவலைக்கிடமாகவும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.கொரோனா தொற்று நோயாளிகளுக்கான முகாம்கள் அனைத்தும் சீன எல்லையில் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் போதிய மருத்துவ வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை என்றே கூறப்படுகின்றது.அது மட்டுமன்றி கொரோனா தொற்றாளர்கள் மட்டுமன்றி, மொத்த குடும்பத்தையும் முகாம்களில் தங்க வைத்துள்ளதாகவும், அவர்களும் உணவுக்கு அவதிப்படுவதாகவும் கூறப்படுகிறது.
கொரோனா தொற்றாளர்களுக்கு பாரம்பரிய முறைப்படியான சிகிச்சையே வழங்கப்படுவதாகவும், ஆனால் அது கொரோனா தொற்றுக்கான சிகிச்சையா என்பதில் சந்தேகம் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.மேலும், கொரோனா தொற்று அறிகுறிகள் தென்படும் மக்களை அவர்களின் குடியிருப்புகளிலிருந்து வெளியேற அனுமதி மறுக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.ஆனால்,சமீபத்தில் நடந்த வடகொரிய தொழிலாளர் கட்சியின் 75-வது ஆண்டு விழாவில், நாட்டில் கொரோனா பெருந்தொற்றை அண்டவிடாமல் காத்த அனைவருக்கும் கிம் ஜாங் உன் நன்றி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.