கொரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்ட கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் கொரோனா நோயாளிகள் அனுமதி..!!

யாழ்ப்பாணத்தில் கொரோனா சிகிச்சை வைத்தியசாலையாக மாற்றப்பட்டுள்ள கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் 18 கொரோனா நோயாளிகள் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே கொரோனா வைத்தியசாலை இருக்கும் நிலையில், சில அதிகாரிகளின் தலையீட்டில் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் கொரோனா வைத்தியசாலை அமைக்கப்பட்டுள்ளது.இருக்கின்ற வைத்தியசாலைகளை விட, புதிய வைத்தியசாலைகள்- அதுவும் கல்வியற் கல்லூரியில் வைத்தியசாலை அமைக்கப்பட்டது பல தரப்பிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில், இன்று நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறான நிலைமையில் குறித்த சிகிச்சை நிலையத்தில் இன்றையதினம் 18 கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அதாவது முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 18 பேர் தற்போது அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.இதன்மூலம், தேசிய கல்வியியற் கல்லூரி மாணவர்களிற்கு உடனடியாக கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்க வாய்ப்பில்லையென தெரிகிறது.