நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் கல்வி அமைச்சு..!!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட பத்தரமுல்ல பகுதியில் உள்ள கல்வி அமைச்சகம் நாளை (வியாழக்கிழமை) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா குறிப்பிட்டுள்ளார். குறித்த பகுதிக்கு கொரோனா தொற்றாளர் ஒருவர் வந்து சென்றுள்ளமை கண்டறியப்பட்டமையைத் தொடர்ந்து இசுருபாய கட்டடம் நேற்று தற்காலிகமாக மூடப்பட்டது.மேலும், குறித்த கட்டடத்தில் தொற்று நீக்கும் நடவடிக்கை நிறைவு செய்யப்பட்டவுடன், மீண்டும் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில், தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதை அயடுத்து, கல்வி அமைச்சகம் நாளை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.