இலங்கையில் பொலிஸாரை துரத்தும் கொரோனா!! இதுவரை 263 பேருக்குத் தொற்று..!!

பொரளை பொலிஸ் நிலையத்தின் 41 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பொரளை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மொத்தம் 56 அதிகாரிகள் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் எஸ்.ரி.எவ் வீரர்களும் உள்ளனர்.இதுவரை 263 பொலிசார் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.