யாழ் மக்களுக்கு மிகவும் நம்பிக்கை தரும் செய்தி..முதல் தொகுதி கொரோனா நோயாளிகளை வெற்றிகரமாக குணப்படுத்தி வெளியேற்றிய மருதங்கேணி கொரோனா வைத்தியசாலை..!!

மருதங்கேணி கொரோனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 16 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

மாவட்டத்திற்கு ஒரு கொரோனா வைத்தியசாலை அமைக்கும் திட்டத்தின்படி, யாழ் மாவட்ட கொரோனா வைத்தியசாலை மருதங்கேணியில் அமைக்கப்பட்டது.இங்கு அனுமதிக்கப்பட்ட 50 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களில் 16 பேர் குணமடைந்து நேற்றிரவு வைத்தியசாலையிலிருந்த வெளியேறினர்மருதங்கேணி கொரோனா வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய முதல் தொகுதியினர் இவர்களாவர்.