சற்று முன்னர் கிடைத்த செய்தி..யாழில் 9 வயதுச் சிறுமிக்கு கொரோனா..!!

உடுவிலில் 9 வயது சிறுமிக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.உடுவில், சங்குவேலிப் பகுதியை சேர்ந்த சிறுமியே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

கொழும்பிலிருந்து வந்த தாயொருவரையும், 3 பிள்ளைகளையும் சுகாதாரப் பிரிவினர் தனிமைப்படுத்தி வைத்திருந்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் 9 வயது சிறுமி தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.கொழும்பு – கொட்டாஞ்சேனையில் உணவகம் ஒன்றில் பணியாற்றும் தந்தையிடம் சென்று கடந்த 25ம் திகதி திரும்பிய தாய் மற்றும் மகள் வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.கொழும்பு – கொட்டாஞ்சேனையில் உணவகம் ஒன்றில் பணியாற்றும் தந்தையிடம் சென்று கடந்த 25ம் திகதி திரும்பிய தாய் மற்றும் மகள் வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.அவர்கள் இருவரிடமும் நேற்று மாதிரிகள் பெறப்பட்டன.அவர்களில் மகளுக்கு கோவிட் -19 நோய் உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதேவேளை, கடந்த வாரம் உடுவில் அம்பலவாணர் வீதி உதயசூரியன் சந்தியில் தாய் மற்றும் 2 வயது மகளுக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.