சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் கடும் மோதல்..கைதியொருவர் பரிதாபமாகப் பலி..!!

மொனராகலை சிறைச்சாலையில் இரு தரப்பு கைதிகளுக்கு இடையில் இன்று மதியம் ஏற்பட்ட மோதலில் மெஸ்ஸா என அழைக்கப்படும் கைதி கொல்லப்பட்டுள்ளதாக சிறைச்சாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைதிகளுக்கு இடையிலான மோதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அதிகாரிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதுடன் ஒரு அதிகாரி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் காரணமாக சிறை கைதிகளுக்கு மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இராணுவத்தினரும், விசேட அதிரடிப்படையினரும் மொனராகலை சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.சிறைச்சாலைகள் திணைக்களமும் மொனராகலை சிறைச்சாலை அதிகாரிகளும் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.