இலங்கையில் கொரோனாவால் பதிவாகியுள்ள மற்றுமொரு மரணம்..!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவவின் கையொப்பத்துடன் இன்று மாலை ஏழு மணிக்கு குறித்த அறிவிப்பு அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பு – 15 பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது.