அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட மற்றுமொரு புதிய பதவி..!!

அரசியலமைப்பின் இருபதாம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள நாடாளுமன்றப் பேரவைக்கு பிரதமரினால் நியமிக்கப்படும் பிரதிநிதியாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்படுவது தொடர்பாக இன்று நாடாளுமன்றில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற பேரவவை அமைக்கப்படவுள்ளதுஇந்தநிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் பிரதிநிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நாடாளுமன்ற பேரவைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ, சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் உத்தியோகபூர்வமாகநியமனம் பெறுவார்கள்.பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதிகள் உறுதிப்படுத்தப்பட்டவுடன் அடுத்த வாரம் நாடாளுமன்ற பேரவை ஸ்தாபிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.