கொரோனா அபாயத்தால் இசுறுபாயவிலுள்ள கல்வி அமைச்சுக்கு பூட்டு..!!

பத்தரமுல்லையில் பல அரச நிறுவனங்கள் இயங்கும் இசுருபாய கட்டடத்தினை மறு அறிவித்தல் விடுக்கும் வரை மூட சுகாதார அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். இசுருபாய சூழலில் கொரோனா தொற்றாளர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கொரோனா பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.இசுருபாயவில் கல்வியமைச்சு உட்பட பல அரச நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.