கொரோனாவால் உயிரிழந்த 22வது நபர் குறித்து சுகாதார அமைச்சு வெளியிட்ட முக்கிய தகவல்..!!

நாட்டில் பதிவான 22வது கொரோனா மரணம் தொடர்பான விபரங்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.கொழும்பின் ஜம்பட்டா வீதியை சேர்ந்த 68 வயதான பெண், இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த 22 வது நபராக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (01) தனது இல்லத்தில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக பெண் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இருப்பினும், பிரேத பரிசோதனையின் போது நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனைகள் நோயாளிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதை உறுதிப்படுத்தியது.இறந்தவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் சமீபத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதாகவும், மீதமுள்ள குடும்ப உறுப்பினர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டதாகவும் சுகாதார அமைச்சும் தெரிவித்துள்ளது.நீதித்துறை மருத்துவ அதிகாரி நடத்திய பிரேத பரிசோதனையில் கோவிட், நிமோனியாவால் பெண் இறந்தது தெரியவந்தது