இலங்கையில் பொலிஸ் உத்தியோகஸ்தர்களை விட்டு வைக்காத கொரோனா!! மேலும் 39 பொலிஸாருக்கு தொற்று!!

நாட்டில் மேலும் 39 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என கொவிட் -19 தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக கொவிட் -19 தேசிய செயற்பாட்டு மையம் மேலும் கூறியுள்ளதாவது, இராஜகிரியவிலுள்ள தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த 23 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் பொரளை பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்ட 8 பொலிஸ் அதிகாரிகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதேபோன்று இராஜகிரிய பாதுகாப்பு பிரிவில் இணைக்கப்பட்ட 2பொலிஸ் உத்தியோகத்தர்கள், வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் 2பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.’மேலும் கோட்டை , நீர்கொழும்பு பொலிஸ் நிலையங்கள், கொழும்பு நகர போக்குவரத்து பிரிவு, குற்றப்புலனாய்வுத் துறை ஆகியவற்றில் தலா ஒரு அதிகாரி கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்” என குறிப்பிட்டுள்ளது.