சற்று முன்னர் கிடைத்த செய்தி..இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி மேலும் இரு பெண்கள் மரணம்..!!

இலங்கையில் கொரோனாவினால் மேலும் இரண்டு மரணங்கள் சம்பவித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு உறுதி செய்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரு பெண்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு உறுதி செய்துள்ளது.அதற்கமைய இலங்கையில் ஏற்பட்ட கொரோனா மரணங்களின் எண்ணிக்ககை 23 ஆக உயர்வடைந்துள்ளது.கொட்டாஞ்சேனை பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவரும் கிராண்ட்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளளதாக குறிப்பிடப்படுகின்றது.