அதி ஆபத்து வலயத்திலிருந்து யாழ் வந்து எந்தவிதமான பதிவுகளும் இல்லாமல் நடைபாதை வியாபாரம் செய்த இருவர் பொலிஸாரால் கைது.!!

இலங்கையில் கொரோனா 2ம் அலை உருவான மிக ஆபத்தான மினுவாங்கொட பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் வந்து எந்தவிதமான பதிவுகளும் இல்லாமல், நடைபாதை வியாபாரம் செய்துவந்த இருவர் யாழ்.வடமராட்சி – மாலைச்சந்தை பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் நேற்று மாலை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


கடந்த 1 மாதத்திற்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்ததாக கூறும் இவர்கள் யாழ்.நகரில் ஐந்துசந்தி பகுதியில் வாடகைக்கு அறை ஒன்றை எடுத்து தங்கியிருந்துள்ளதுடன், எந்தவிதமான பதிவுகளையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று மாலை வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது,பிரதேச மக்கள் நடத்திய விசாரணையில், இவர்கள் மினுவாங்கொட ஆபத்து வலயத்திலிருந்து வந்துள்ளமை கண்டறியப்பட்டிருக்கின்றது. இதனையடுத்து, கரவெட்டி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் படையினர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகைதந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் அடையாளப்படுத்தப்பட்ட நபர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவிருக்கின்றனர்.