பரபரப்பு நிறைந்த வியன்னா மாநகரில் ஒரே நேரத்தில் அறு இடங்களில் பயங்கரவாத தாக்குதல்கள்.!! அதிகாலை வரை தொடர்ந்த மோதல்.!!

மத்திய வியன்னாவின் பரபரப்பான பகுதியில் துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்துள்ளனர். ஒஸ்திரிய ஜனாதிபதி செபாஸ்டியன் குர்ஸ், இது ஒரு “விரோத பயங்கரவாத தாக்குதல்” என்று விவரித்தார். தாக்குதலின் போது காயமடைந்த பெண்ணொருவர் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் தாக்குதல்தாரியொருவரும் கொல்லப்பட்டார்.நேற்று (2) திங்களன்று இரவு 8 மணியளவில் (19:00 GMT) இந்த தாக்குதல் தொடங்கியது. வியன்னாவின் 6 பகுதிகளில் துப்பாக்கிதாரிகள் தாக்குதலை நடத்தியுள்ளனர்.ஒரு துப்பாக்கிதாரி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. பொலிசார் மிகப்பெரிய நடவடிக்கையை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.பொதுமக்கள் நகர மையத்திலிருந்து விலகி இருக்க வேண்டும் என்றும், பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டாம் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தினர். இன்று செவ்வாய்க்கிழமை பாடசாலைகள் மூடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.மத்திய வியன்னாவின் ஒரு பெரிய பகுதி சுற்றி வளைக்கப்பட்டது. குறைந்தது 15 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.துப்பாக்கிச்சூட்டு சத்தங்கள், ஹெலிகொப்டர் சத்தம், நோயாளர் காவு வண்டி ஒலி வியன்னாவில் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“எங்கள் குடியரசில் நாங்கள் கடினமான நேரங்களை அனுபவித்து வருகிறோம். இந்த மோசமான பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக எங்கள் காவல்துறை தீர்க்கமாக செயல்படும். நாங்கள் ஒருபோதும் பயங்கரவாதத்தால் அச்சுறுத்தப்பட மாட்டோம், இந்த தாக்குதலை எல்லா வகையிலும் போராடுவோம்” என்று குர்ஸ் ட்விட்டரில் கூறினார். இராணுவம் தலைநகரில் உள்ள தளங்களை பாதுகாக்கும். எனவே பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் காவல்துறை கவனம் செலுத்த முடியும்.ஒஸ்திரியாவின் உள்துறை அமைச்சர் கார்ல் நெஹம்மர் “இந்த சம்பவம் ஒரு பயங்கரவாத தாக்குதல். பலர் காயமடைந்தனர் என்பதையும் அவர்களில் இறப்புகளும் இருக்கலாம் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். காயமடைந்தவர்களில் ஒரு போலீஸ் அதிகாரியும் இருந்தார்.“ என்றார்.உள்ளூர் ஊடகங்கள் வியன்னாவின் பிரதான ஜெப ஆலயத்திற்கு அருகே துப்பாக்கிச் சூடு நடந்ததாக செய்தி வெளியிட்டன. ஆனால் அது இலக்கு என்பதை பொலிசார் உறுதிப்படுத்தவில்லை.யூத சமுதாயத் தலைவர் ஒஸ்கர் டாய்ச் ட்விட்டரில், ஜெப ஆலயம் மற்றும் அதை ஒட்டிய அலுவலகங்கள் இலக்காக இருந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை, அந்த நேரத்தில் அவை மூடப்பட்டிருந்தன என்றும் கூறினார்.ஒஸ்திரியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், நள்ளிரவு முதல லொக் டவுன் அறிவிக்கப்பட்டிருந்தது. உள்ளூர் நேரப்படி (23:00 GMT) நள்ளிரவில் லொக்டவுன் நடைமுறைக்கு வர சில மணி நேரங்களுக்கு முன்பு, பார்கள் மற்றும் உணவகங்கள் வாடிக்கையாளர்களால் நிரம்பியிருந்த நேரத்தில் துப்பாக்கிச்சூடு தொடங்கியது.