முழுநாட்டையும் முடக்குவது குறித்து எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை..இராணுவத் தளபதி..!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முழு நாட்டையும் முடக்குவது குறித்து இதுவரையிலும் எந்தவொரு முடிவும் எடுக்கவில்லையென இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடகங்களில் போலியான தகவல்கள் வெளியிடப்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இவ்வாறான போலி செய்திகள் குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.தொடர்ந்தும் பேசிய அவர், தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இல்லாத பகுதிகளில் உள்ளவர்களையும் இந்த நேரத்தில் வெளியில் செல்லாமல் வீட்டிற்குள் இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.இதேவேளை, கேகாலை மற்றும் குருணாகல் மாவட்டங்களின் சில பகுதிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஹெம்மாதகம, மாவனல்ல, புலத்கொஹபிட்டிய ஆகிய பொலிஸ் பிரிவுகள் மற்றும் கலிகமுவ பிரதேச செயலகப் பிரிவு என்பன இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.குருணாகல் மாவட்டத்தின் கிரியுல்ல பொலிஸ் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்ட வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.இதனிடையே, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் உரிய தனிமைப்படுத்தல் விதிகளை மீறும் பட்சத்தில், அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இ பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.