கிளிநொச்சிக்கும் வந்தது கொரோனா!! கொழும்பு உணவகத்தில் பணியாற்றியவருக்கு தொற்று உறுதி..!!

கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்தில் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு 13 அமைந்துள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றிய இவர் கடந்த 28 ஆம்
திகதி கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தர்மபுரம்
கிராமத்திற்கு வருகை தந்துள்ளார். குறித்த நபர் வருகைதந்தவுடன் அவர்
உடனடியாக சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.கண்டாவளை பிரதேச வைத்திய அதிகாரியும் பொதுச் சுகாதார பரிசோதகரும்
விழிப்பாக செயற்பட்டமையால், உடனடியாக குறித்த நபர் சுய
தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்ட நிலையில், அவர் பணியாற்றிய உணவக
உரிமையாளர் மற்றும் அங்குள்ள கடமையாற்றிய சில பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமையினையடுத்து, இவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்ட நிலையில், கிளிநொச்சி மாவட்டம் மாத்திரமே கொரோனா தொற்றாளர்கள் இன்றிய மாவட்டமாக இருந்த நிலையில், இன்று முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இரு்ப்பினும், பொதுமக்கள் அச்சம் கொள்ளும் அளவுக்கு நிலைமைகள் இல்லை எனவும், முதியவர்கள், சிறுவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோர் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இருக்குமாறும், அவசிய தேவைகளை தவிர்ந்து, வெளியில் செல்வதனை தவிர்க்குமாறும் பொதுமக்களிடம் சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.