இலங்கையில் மேலும் 164 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்..!!

நாட்டில் மேலும் 164 புதிய கொரோனா தொற்றாளர்கள் இன்று கண்டறியப்பட்டுள்ளனர். இதன்மூலம், மினுவாங்கொட-பேலியகொட கொத்தணியில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,746 ஆக உயர்ந்துள்ளது.

தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த 121 பேர், தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த 43 பேர் இன்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 11,224 ஆக உயர்ந்துள்ளது.இன்று 344 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,249 ஆக அதிகரித்துள்ளது.இரண்டு வெளிநாட்டினர் உட்பட 5,954 கொரோனா நோயாளிகள் தற்போது நாடு முழுவதும் உள்ள 46 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா சந்தேகத்தில் 389 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.