கட்டிட இடிபாடுகளில் சிக்கி 36 மணி நேரமாக உயிருக்குப் போராடிய 70வயது முதியவரை தமது அயராத முயற்சியால் மீட்டெடுத்த மீட்பு பணியாளர்கள்..!!

துருக்கியை உலுக்கிய பூகம்பத்தால், கட்டிட இடிபாடுகளில் சிக்கி 36 மணித்தியாலங்களாக போராடிய 70வயது முதியவரொருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

துருக்கியின் மேற்கு பகுதியிலுள்ள ஏகன் தீவுகளில் கடந்த 30 ஆம் திகதி 7.0 என்ற ரிச்டர் அளவிலான சக்தி வாய்ந்த பூகம்பமொன்று ஏற்பட்டது.இந்தப் பூகம்பத்தினால் கடற்கரையோரத்திலுள்ள இஸ்மிர் நகரம் பாரிய அளவில் பாதிக்கப்பட்டதோடு சுமார் 81 பேர் வரை உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.இதேவேளை 962 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 740 பேர் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.