தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த 228 பேர் இன்று தமது சொந்த வீடுகளுக்கு..!

கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை முடித்த 228 பேர் இன்று தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

முப்படையினரால் பராமரிக்கப்படும் ஐந்து தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் இருந்து இவர்கள் விடுவிக்கப்பட்டனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, இதுவரை 64 ஆயிரத்து 955 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை முடித்துள்ள அதேவேளை 4,039 பேர் தொடர்ந்து தனிமைப்படுத்தலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.