சற்று முன்னர் கிடைத்த செய்தி..இலங்கையில் 22 வது கொரோனா மரணம்..!!

இலங்கையில் 22ஆவது கொரோனா மரணம் சற்று முன்னர் பதிவாகியுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு உறுதி செய்துள்ளது.

கடந்த 31ஆம் திகதி பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை உறுதியாகியுள்ளது.உயிரிழந்தவர் 27 வயதுடைய நபராகும். அவர் பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்தவராகும். இவ்வாறு அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் எனவும், அதன் பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் கொரோனா தொற்று காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.