சமூகத்திற்குள் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முடிந்ததாகவும் இதனடிப்படையில் நாட்டை மீண்டும் வழமை நிலைமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது தனது தனிப்பட்ட நம்பிக்கை எனவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
சமூகத்திற்குள் நோய் பரவுவதை தடுக்க முடிந்துள்ளது. தற்போது சுமார் ஒரு மாத காலமாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு நாட்டை ஓரிடத்தில் வைத்துள்ளோம்.நாட்டின் பொருளாதாரம் பெரியளவில் பிரச்சினைக்குரிய நிலைமையாக மாறி வருகிறது. தினமும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி நாட்டை மூடி வைக்க வேண்டும் என நான் நம்பவில்லை.
