கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை முக்கிய ஆவணத்தில் கையெழுத்து!!

கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்காக கையெழுத்திட்டுள்ள நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குவதாக தெரியவருகிறது.

எனினும், 2021ஆம் ஆண்டு நடுப்பகுதி வரை கொரோனா வைரஸ் தடுப்பூசி கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியின் பரீட்சார்த்த நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.இந்த நிலையில், 2021ஆம் ஆண்டிலேயே இந்த தடுப்பூசிகள் நாடுகளுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக உலக சுகாதார மையத்தின் மேம்படுத்தல் மற்றும் தொலைத்தொடர்புகள் அலுவலர் சஹானி சந்ரரட்ன தெரிவித்துள்ளார்.ஏற்கனவே கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும், தமது அமைச்சு அவற்றை பெற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் இலங்கையின் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்திருந்தார்.இது குறித்து கருத்துரைத்துள்ள உலக சுகாதார அமைப்பின் மேம்படுத்தல் மற்றும் தொலைத்தொடர்புகள் அலுவலர் சஹானி சந்ரரட்ன, தடுப்பூசிகளின் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் இந்த வருட இறுதியிலேயே ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.