இலங்கையில் 21ஆவது கொரோனா மரணம்..!!

இலங்கையில் 21ஆவது கொரோனா மரணம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் வெலிசர வைத்தியசாலையில் குறித்த மரணம் ஏற்பட்டுள்ளது.உயிரிழந்தவர் 40 வயதுடைய ஆண் எனவும் அவர் மஹர பிரதேசத்தை சேர்ந்தவர் என குறிப்பிடப்படுகின்றது.அதிக இரத்த அழுத்தம் மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்சினை காரணமாக கடந்த 23ஆம் திகதி அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.முதலாவது PCR பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றாளர் இல்லை என தெரியவந்துள்ளது.எனினும் நேற்று உயிரிழந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றாளர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.இந்தத் தகவல்கள் சற்று முன்னர் அரச தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.