தற்போது மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஒன்பதாம் திகதி காலை 5 மணி வரை இந்த ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.மேல் மாகாணத்தில் தொடர்ந்தும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக அதனை கட்டுப்படுத்தும் பொருட்டு இவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

மாவட்டங்களுக்கு இடையிலான பயணங்களை வரையறுத்துக் கொள்ளுமாறும் மிகவும் அத்தியாவசிய பயணங்களை மேற்கொள்ளுமாறும் கோரியுள்ளார்.