அதிதீவிரமாக மாறும் கொரோனா.. வேறு வழியில்லாமல் அடுத்த வாரம் முழுமையாக லொக்டவுணுக்கு செல்கிறது பிரித்தானியா..? தமிழர்களே ஜாக்கிரதை..!!

அடுத்த வாரம் முதல் நாடு தழுவிய ரீதியில் லொக் டவுனை அறிவிக்க பொறிஸ் ஜேன்சன் தயாராகி வருவதாக சற்று முன்னர் செய்திகள் வெளியாகி உள்ளது. இது நாள் வரை லொக் டவுன் என்னும் பிரச்சனை இழுபறி நிலையில் இருந்தது.


ஆனால், மருத்துவ விஞ்ஞானிகள் கொடுத்த அறிக்கை ஒன்றை முற்றாக படித்துப் பார்த்த பிரித்தானிய பிரதமர், லொக் டவுன் ஒன்றை கொண்டு வந்தால் தான், நிலையை கட்டுப்பாட்டினுள் கொண்டு வர முடியும் என்ற முடிவை எட்டியுள்ளார் என்று சற்று முன்னர் தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னதாக பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் அரசை மேற்கோள் காட்டி, பிரித்தானிய MP க்கள் பலர் லொக் டவுனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள். காரணம் என்னவென்றால், பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் நாடுகளில் அரசின் திறைசேரியில் பணம் இல்லை என்பது தான். இந்த 2 நாடுகளும் ஏற்கனவே வங்குரோத்தில் சென்று தற்போது கடன்கார நாடாக மாறியுள்ளது. எனவே பிரித்தானியாவையும் லொக் டவுன் செய்தால், பிரித்தானியா பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என பல MP க்கள் கருத்து தெரிவித்து வந்தார்கள்.இன் நிலையில் தான், மருத்துவ விஞ்ஞானிகளின் அறிக்கை ஒன்று வெளியாகி, உண்மை நிலையை உணர்த்தியுள்ளது. இதனால் அடுத்த வாரம் முழு அளவிலான லொக் டவுன் வரப்போகிறது..பிரித்தானியத் தமிழர்களே..உங்களுக்குத் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களை சேமித்து வைத்தால் நல்லது.