கொழும்பு மாநகரில் பொலிஸாரையும் விட்டு வைக்காத கொரோனா..!! அதிரடியாக பூட்டப்பட்ட பொலிஸ் நிலையம்..!!

கொழும்பு கடலோர பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 10 உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து குறித்த பொலிஸ் நிலையம் இன்று காலை முதல் மூடப்பட்டுள்ளது.

மூடப்பட்ட பொலிஸ் நிலையத்தைச்சேர்ந்த பொறுப்பதிகாரி உட்பட 80 உத்தியோகத்தர்களவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் மூடப்பட்ட பொலிஸ் நிலையத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.