வத்தளையில் தனியார் தொழிற்சாலையொன்றில் 49 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று..!!

வத்தளையில் உள்ள ஒரு தனியார் துறை தொழிற்சாலையின் 49 பணியாளர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக வத்தளைப் பிரிவின் பொதுச் சுகாதார பரிசோதகர் வாரூனா அபேசேகர அறிவித்துள்ளார்.

குறித்த தொழிற்சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணி புரிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கொரோனா தொற்றை அடுத்து தற்போது தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது.120 பேருக்கு பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொண்ட பின்னரே இந்த 49 பேரும் தொற்றாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதற்கிடையில், வத்தளை – சுகாதார மருத்துவ அலுவலர் பிரிவில் கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 75 ஆண்கள் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை களுத்துறை – ஹொரன பகுதியில் இன்று 24 புதிய தொற்று நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.இதில் பிரபலமான தொழிற்சாலையின் பணியாளரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர்களின் சுமார் 170 நெருங்கிய தொடர்புகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது.களுத்துறை மாவட்டம் இதுவரை 355 புதிய கொரோனா வைரஸ் தொற்றுநோய்களை பதிவு செய்துள்ளதாக களுத்துறை பிராந்திய சுகாதார சேவைகள் இயக்குநர் வைத்திய கலாநிதி உதய ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.இதற்கிடையில் சுகாதார அமைச்சின் பணியாளர் ஒருவரும் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.