கொரோனாவின் எதிரொலி..கிழக்கில் இழுத்து மூடப்பட்ட வணக்கஸ்தலங்கள்.!!

கொரோனாவின் கொடுரத் தாக்கம் காரணமாக கல்முனைப் பிராந்தியத்திலுள்ள சகல வணக்கஸ்தலங்களும் காலவரையற்றுப் பூட்டப்பட்டுள்ளன.

கிழக்கில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்துவருகிறது. நேற்றைய நிலைவரத்தின்படி 61 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். கிழக்கின் நிலைமை மோசமடைந்துவருவதால் சுகாதாரத்துறையினரால் இறுக்கமான நடைமுறைகள் பின்பற்றப்பட்டுவருகின்றன.எனவே, பொதுமக்களை ஆலயம், பள்ளிவாசல் மற்றும் தேவாலயம் போன்ற வணக்கஸ்தலங்களுக்குச் செல்லாது வீட்டிலிருந்தே இறைவனை வணங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.மேலும், வரலாற்றுப் பிரசித்திபெற்ற காரைதீவு கண்ணகை அம்மன் ஆலயம் மற்றும் சம்மாந்துறை ஹிஜ்ரா பதூர் ஜூம்ஆப் பள்ளிவாசல் பூட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.