பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை..!

பாடசாலைகளை எதிர்வரும் 09 ஆம் திகதி மீண்டும் திறக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான சுகாதார வழிகாட்டுதல்களை எழுத்து மூலம் வழங்குமாறு சுகாதார அமைச்சிடம் கோரியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.மாணவர்களுக்கு இணையத்தளம் ஊடாக முன்னெடுக்கப்படும் கற்றல் செயற்பாடுகளில் சிலருக்கு இணையத்தள வசதியின்மையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.இதேவேளை,நாடளாவிய ரீதியில் பல பிரசேதங்களில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் பாடசாலைக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், நாட்டில் பல பிரசேதங்கள் முடக்கப்பட்டிருக்கின்ற நிலையில் பாதிக்கப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,000ஐ கடந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.