PCR பரிசோதனை முன்னெடுக்கப்போவதாக வீட்டினுள் நுழைந்து கொள்ளையடித்த கில்லாடித் திருடர்கள்.!!

கொவிட் வைரஸ் தொற்று தொடர்பாக மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனையின் போது குளுசைகளோ அல்லது வேறு எதுவும் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்று வைத்தியர்களும்,சுகாதார பரிசோதகர்களும் தெரிவித்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோகண தெரிவித்தார். PCR பரிசோதனை என்ற போர்வையில் நேற்று இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாகவே அவர் இதனை தெரிவித்தார்.PCR பரிசோதனை மேற்கொள்வதாக கூறி மாஹவ கெத்தபஹூவ என்ற இடத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாகவே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

நேற்று மாலை 3.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தின் போது வீட்டிலிருந்த மூன்றரை பவுண் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு எதிர்நோக்கியுள்ள நிலைமையில் இவ்வாறான மோசடிகளில் ஈடுபடுகின்றனர். இந்த மோசடிக்காரர்கள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஏதேனும், சந்தர்ப்பத்தில் சுகாதார பரிசோதகர்கள் வந்தால் எந்த சந்தர்ப்பத்திலும் PCR பரிசோதனைக்காக குழுசைகளையோ அல்லது வேறு எந்த மருந்துகளையோ தரமாட்டார்கள். இதனை வைத்தியர்கள் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் உறுதி செய்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.குறிப்பிட்ட கொள்ளை சம்பவத்தின் போது PCR பரிசோதனை என்ற போர்வையில் மூவர் அந்த வீட்டிற்குள் பிரவேசித்துள்ளனர். இவர்களில் ஒருவர் பெண் என்றும் அவர் குறிப்பிட்டார்.பரிசோதனைக்காக குளுசைகளை வழங்கியுள்ளனர். அதனை உட்கொண்ட பின்னர் அவர்கள் நித்திரையாகி உள்ளனர். காலையில் பார்த்த போதே தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டது கண்டறியப்பட்டதாக பொலிஸ் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர்.மாஹவ பொலிஸார் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.