நேற்று வேலணையில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் குறித்து வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்..! யாழ் மக்களே மிகவும் அவதானம்..!!

யாழ்.வேலணையில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் முச்சக்கர வண்டியில் யாழ்.நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள், மற்றும் சிகை அலங்கரிப்பு நிலையம், உணவகம் ஆகியவற்றுக்கு சென்றுவந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், யாழ்.நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் சிலவற்றுக்கும், குறித்த நோயாளி சென்றுவந்த சிகை அலங்கரிப்பு நிலையம் மற்றும் உணவகம் ஆகியன மூடப்பட்டிருக்கின்றது.மேலும், குறித்த தொற்றுக்குள்ளான குறித்த நபர் 2 நாட்களாக வேலணையிலிருந்து முச்சக்கர வண்டியில் யாழ்ப்பாணம் வந்து சென்றுள்ள நிலையில் முச்சக்கர வண்டி ஓட்டுனர் அடையாளம் காணப்பட்டு கொட்டடியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.மேலும், குறித்த நபர் சென்றுவந்த இடங்கள் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர். இதேவேளை குறித்த நபருடைய உறவினர்கள், மற்றும் அயலவர்கள் சிலரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.