இதுவரையில் இலங்கையின் 24 மாவட்டங்களுக்குப் பரவிய கொரோனா.!! தப்பிப் பிழைத்த வடக்கின் ஒரே மாவட்டம்.!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை நேற்றைய தினம் 10,105 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினமும் குருநாகல், பூண்டுலோயா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புதிதாக வைரஸ் தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.நாட்டில் 24 மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டுள்ளது.எனினும், கிளிநொச்சி மாவட்டத்தில் எவருக்கும் தொற்றில்லை என தெரிவிக்கப்படுகின்றது.அதேவேளை நேற்று தொழில் திணைக்களத்தில் மற்றும் ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரி ஒருவருக்கும் வைரஸ் தொற்று இருப்பதாக இனங்காணப்பட்டுள்ளது.அதேவேளை,கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் 5,630 பேர் தொடர்ந்து பல்வேறு வைத்தியசாலைகளில் மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன் நேற்றையதினம் 140 நோயாளிகள் குணமடைந்துள்ளதுடன் மொத்தமாக 4,282 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.மேல் மாகாணத்தில் 43 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொரோனா வைரஸ் நோயாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர். அத்துடன் மேலும் 893 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அலுவலகம் தெரிவித்தது.