இலங்கையில் நேற்று புதிதாக அடையாளம் காணப்பட்ட 633 கொரோனா நோயாளிகள் தொடர்பான விபரங்கள்.!!

இலங்கையில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 633 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அந்தவகையில், நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 264 பேர் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் 162 பேர் கொழும்பை சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை 18 பேர் களுத்துறை மாவட்டத்தையும் 17 பேர் குருநாகல் மாவட்டத்தையும் 11 பேர் கேகாலை மாவட்டத்தையும் சேந்தவர்கள் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும், இரத்தினபுரியில் 05 பேரும் காலி 04 பேரும் கண்டி மற்றும் மாத்தளையில் தலா 03 பேரும் அம்பாறையில் 02 பேரும் பதுளை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை பகுதிகளில் தலா ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதேவேளை தனிமைப்படுத்தல் நிலையங்களை சேர்ந்த 138 பேருக்கும் 03 பொலிஸ் அதிகாரிகளுக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.