இலங்கையில் செயலிழந்து போன பி.சி.ஆர் இயந்திரத்தை சரி செய்வதற்கான வல்லுநர்கள் குழு இன்று இரவு சீனாவிலிருந்து வந்துள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது இது குறித்து கொழும்பில் உள்ள சீன தூதரகம் டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.இலங்கை வந்துள்ள வல்லுநர்கள் அனைத்து பி.சி.ஆர் இயந்திரங்களையும் சரிபார்த்து பராமரிப்பார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை அரசின் வெளிப்படையான கோரிக்கையினை ஏற்று இந்த வல்லுநர்கள் குழு இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.