சற்று முன் கிடைத்த செய்தி…யாழ்ப்பாணத்தில் 06 பேருக்கு கொரோனா..!!

யாழ். மாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இதன்படி, வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேருக்கும், உடுவில் மருத்துவ அதிகாரி பிரிவில் 2 பேருக்கும், யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் – உடுவிலில் தாய் மற்றும் 10 வயதுடைய மகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.வெள்ளவத்தையில் இயங்கும் யாழ்.ஹோட்டல் உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அங்கு பணியாற்றிய புங்குடுதீவைச் சேர்ந்த இருவர், வேலணையைச் சேர்ந்த ஒருவர், மற்றும் யாழ்ப்பாணத்தில் ஒருவர் என்று நான்கு பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.மாளிகாவத்தையில் வசிக்கும் பெண் தனது மகளுடன், உடுவில் அம்பலவாணர் வீதியில் உதயசூரியன் சந்தியில் வசிக்கும் தனது தாயாரின் வீட்டில் வந்து தங்கியிருந்த வேளை பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் தனிமைப்படுத்தப்பட்டனர்.அவர்களிடம் நேற்று மாதிரிகள் பெறப்பட்டன. அவை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இன்றிரவு அவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.