இலங்கையில் பத்தாயிரத்தைக் கடந்தது கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை!!

இலங்கைக்குள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 314 கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் திவுலப்பிட்டிய மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணிகளில் கண்டறியப்பட்ட கொரோனா நோயாளிகளின எண்ணிக்கை 6627ஆக பதிவாகியுள்ளது.இந்த நிலையில், இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா தொற்றுக்கு இலக்கான நோயாளிகளின் எண்ணிக்கை பத்தாயிரத்தை கடந்து 10105ஆக பதிவாகியுள்ளது.மேலும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 5804ஆக காணப்படுவதுடன், நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19ஆக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.