பாடசாலை மாணவியினால் நடு வீதியில் இளைஞருக்கு நேர்ந்த கதி..!!

இளைஞர் ஒருவரை திடீரென்று கத்தியால் குத்திக் கொலை செய்த 14 வயது பள்ளி மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பிரித்தானியாவில் நடந்த இந்தச் சம்பவத்தில் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் பலியானதாக பொலிஸ் தரப்பு கூறியுள்ளது.Three lridges ரயில் நிலையம் அருகே நேற்றிரவு 9 மணியளவில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுக் கிடப்பதாக அவசர மருத்துவக் குழுவுக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து பொலிசாரும் மருத்துவ உதவிக்குழுவினரும் அங்கு விரைந்துள்ளனர்.அங்கே 24 வயதுடைய இளைஞர் ஒருவர் பலத்த காயங்களுடன் தெருவில் விழுந்து கிடந்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து கொலையாளியைத் தேடும் முயற்சியில் பொலிசார் இறங்கினர்.இதன்போது 14 வயதுடைய பள்ளி மாணவி ஒருவர் கைதானார். குறித்த மாணவி நேற்று இரவே அந்த இளைஞரை கொலை செய்ததாக கூறப்படுகிறது.கொலை செய்யப்பட்டவரும் அந்த பெண்ணும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என தெரிவித்த பொலிசார் குற்றவாளிக்கு உதவியதாக லண்டனைச் சேர்ந்த 21 வயது இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட இளைஞரின் நண்பர் ஒருவர் இது குடும்பத்தகராறாக இருக்கும் போல் தெரிகிறது என்றும் கூறியுள்ளார்.