பிறந்து 21 நாட்களேயான பச்சிளம் குழந்தைக்கும் கொரோனா.!!

தங்காலை – குடாவெல்ல பகுதியில் 25 வயதான ஒரு பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், பிறந்து 21 நாட்களேயான அவரது குழந்தைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், குறித்த பெண் கண்டியில் இருந்து கிரிபத்கொடை பகுதிக்கு வந்து பேலியகொட மீன் விற்பனை நிலையத்தில் தொழில் புரியும் தமது உறவினருடன் ஒரு வாரக்காலம் தங்கியிருந்து, பின்னர் குடாவெல பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.