திடீர் உடல்நலக் குறைவினால் உயிரிழந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி.!!

பியகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

நேற்று, உத்தியோகபூர்வ கடமைகளில் ஈடுபட்ட பின்னர் மாலை 6.30 மணியளவில் பொலிஸ் நிலையத்திற்கு திரும்பும் போது அவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது.உடனடியாக கிரிபத்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்பது தெரிய வந்தது.நீர்கொழும்பை சேர்ந்த 51 வயதான இந்த அதிகாரி, மாரடைப்பினால் உயரிழந்திருக்கலாமென பொலிசார் நம்புகிறார்கள்.