யாழில் உச்சம் பெறும் கொரோனா..பொது மக்களுக்கு விடுக்கப்படும் மிக அவசர அறிவித்தல்..உடனடியாக அமுலாகும் புதிய கட்டுப்பாடுகள்.!!

யாழ் மாவட்டத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புகுழுத்தலைவர் அங்கஜன் இராமநாதன், யாழ் மாவாட்ட அரசாங்க அதிபர் மகேசன், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன், வடமாகாண சுகாதார சேவைகள் பணப்பாளர் கேதீஸ்வரன், வடமாகாண உளநல சேவை பணிப்பாளர் கேசவன், யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி, யாழ் மாவட்ட கட்டளை தளபதி, யாழ் மாவட்ட அனர்த்தமுகாமைத்துவ பணிப்பாளர், யாழ் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், பொலீஸ் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், யாழ் மாநகர ஆணையாள், பிராந்திய சுகாதார பணிப்பாளர்கள், சுகாதார சேவை சம்மந்தம்பட்ட அதிகாரிகள், அரச அதிகாரிகள், ஊடகத்தினர் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள்-திருமணம் – வீட்டில் நடத்த 50 பேர் அனுமதி வழங்கப்படும். (வெளிமாவட்டத்தில் இருந்து கலந்தைகொள்ள வருகைதருவது தடை). மரணசடங்கு – 25 பேர் அனுமதி (2 தொடக்கம் 3 நாட்கள் நிறைவுறுத்த வேண்டும்) (வெளிமாவட்டத்தில் இருந்து கலந்தைகொள்ள வருகைதருவது தடை),நடைபாதை வியாபாரம் – மரக்கறி வியாபரத்திற்கு மட்டும் அனுமதி,தனியார் கல்வி நிறுவனங்கள் முழுமையாக இயங்கத் தடை..திறந்த சந்தைகளுக்கு அனுமதி இல்லை.விளையாட்டு போட்டிகளை எக்காரணம் கொண்டும் நடத்த முடியாது. எந்தவொரு மக்கள் கூட்டங்களை, பொது நிகழ்வுகளையும் ஒத்திவைக்கவும், பேரூந்துகளில் இருக்கைகளில் மட்டும் அனுமதி. திறந்த சந்தைகள் இயங்குவதற்கு முழுமையாக அனுமதி மறுக்கப்படுகிறது,உணவங்களில் இருந்து உண்பதற்கும் தடை.. (பார்சல் மட்டும் அனுமதி)

வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தருவோர் கிராமசேவகர்கள் ஊடாக பதிய வேண்டும். தொழிற்சாலைகளில் வெளிமாவட்டத்தல் இருந்து வருகை தந்து தொழில் புரிவோர், முடக்கப்பட பகுதிகளில் இருந்து பணிபுரிவோருக்கு தங்குமிடம், உணவு வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.அரச அலுவலகங்களில் அரச உத்தியோகத்தர்களுக்கு தகவல் திரட்டு செய்யப்படவேண்டும்.முடக்கப்பட்ட இடங்களில் இருந்து வெளியிடங்களுக்கு செல்ல தடை, முடக்கப்பட்ட பகுதிகளுக்குள்ளே குடும்பத்தில் ஒருவர் மட்டும் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வெளியில் செல்லலாம்.
அவசர தொலைபேசி உதவி இலக்கமாக 0212225000 செயற்படும்.அவசர நிலை கருதி ஒருங்கிணைத்த செயலகமாக மாவட்டசெயலகம், பிரதேச செயலகம் 7 நாட்களும் செயற்படும். ஆலயங்களில் மதகுருமார்களுக்கு மட்டும் அனுமதி.அன்னதானங்களுக்கு முழுமையான தடை.
பாடசாலை நேர்முகப் பரீட்சைக்கு கட்டுபாடுகளை கல்வித் திணைக்களம் மேற்கொள்ளும்.