யாழில் இலவச முகக் கவசங்களை விநியோகம் செய்யும் பிரபல தனியார் நிறுவனம்..!!

யாழில் இலவச முகக் கவசங்களை விநியோகம் செய்யும் பிரபல தனியார் நிறுவனம்
ஒன்றாக வெல்வோம் கொரோனாவை..!

இலவசமாக முக கவசங்களை பெற்றுக் கொள்ளலாம்…

யாழில் சுயநலம் மிக்க மனிதர்கள் தான் அதிகமாக காணப்படுகிறார்கள்.அதிலும், மனிதாபிமானம் மிக்க மனிதர்களை காண்பது மிகவும் அரிதானது. அப்படியான மனிதரைத் தான் இன்று யாழ் மக்கள் மிகவும் பெருமையாக பேசி வருகிறார்கள். ஆம் உரிமையாளர் நல்லதொரு சிறப்பான செயலை செய்து வருகிறார்.இது யாழ் மக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.இன்று உலகத்தையே சோகத்தில் ஆழ்த்தி வரும் கொடிய உயிர்க்கொல்லி நோயான கோரோனா தலைதூக்கி நிற்கின்றது.

இதனால் மனிதர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உண்பதற்கு உணவு இல்லாவிட்டாலும் இந் நோயிலிருந்து விலகி நாம் பாதுகாப்பாக இருப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். இதற்கு எமது உயிர் மிகவும் முக்கியமானது.இதற்கு நாங்கள் உரியமுறையில் செயற்பட்டால் மட்டுமே வெற்றி காணலாம்.ஒவ்வொருவருக்கும் தேவைகள் அதிகமாக இருக்கும். இதற்காக நாங்கள் வெளியில் செல்ல நேரிடும்.வெளியில் செல்லும் போது, முகக் கவசம் அணிந்து செல்வது கட்டாயம். ஆனால் இன்று, பெரும்பாலான இடங்களில் முகக் கவசத்திற்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. அதனைக் கொள்வனவு செய்ய முடியாத நிலையில் பொதுமக்கள் இருக்கிறார்கள்.

இவ்வாறானதொரு சூழலில் யாழ் பிரபல தனியார் நிறுவனமான JK Dreams Studio வின் உரிமையாளர் முகக் கவசங்களை சொந்தமாகத் தயாரித்து பொதுமக்களுக்கு நேரில் சென்று வழங்கி வருகிறார். இது யாழ் மக்களை மகிழ்ச்சியடைச் செய்துள்ளது மட்டுமல்லாமல் அனைவரும் பெருமைப்பட வேண்டிய விடயமும் கூட.இவருடைய இந்தச் செயலை அனைவரும் பாராட்டி வாழ்த்தி வருகின்றனர்.