யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று நடைபெற்ற 234 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனையில் மருதங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்டவாறு யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். இதன்படி வடமாகாணத்திலிருந்து 234 பேருடைய பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது.இதன்போது, வடமாகாணத்தில் புதிதாக ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.
