இரவு வேளையில் கொழும்பில் இருந்து வெளியேறத் தயாராகும் பொதுமக்கள்..!!

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் வெளி மாகாணங்களில் இருந்து மேல் மாகாணங்களுக்கு வந்தவர்கள் பலர் இரவு வேளையில் வெளியேறுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கொட்டாவையிலிருந்து காலி வரை அதிக போக்குவரத்து காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பின்னாதுவ நுழைவாயிலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.இதனால், பல்வேறு சிராமங்களுக்கு வாகன சாரதிகள் தள்ளப்பட்டுள்ளனர்.மேலும், இது தொடர்பில் தெரிய வருவதாவது..பொலிஸாரின் கோரிக்கையையும் புறக்கணித்து மேல் மாகாணத்தில் இருந்து பலர் ஏனைய மாகாணங்களுக்கு செல்ல தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

எவரும் மேல் மாகாணத்தில் இருந்து ஏனைய மாகாணங்களுக்கு செல்லவேண்டாம் என்று அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.மேல் மாகாணத்தில் நேற்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 2ம் திகதி அதிகாலை வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்செய்யப்படவுள்ளது.இந்தநிலையில், இதனை கருத்திற்கொண்டு பலர் ஏனைய மாகாணங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். எனினும், மேல் மாகாணத்தில் இருந்து ஏனைய மாகாணங்களுக்கு செல்வதால் அந்த மாகாண மக்களுக்கு சுகாதார அச்சுறுத்தல்கள் ஏற்படலாம் என்று ஏற்கனவே பொலிஸார் அறிவித்திருந்தனர்.இதேவேளை மூன்று விடுமுறை தினங்களை கருத்திற்கொண்டு ஏனைய மாகாணங்களில் இருந்து எவரும் நுவரெலியாவுக்கு வரவேண்டாம் என்று நுவரெலிய அரச அதிபரும் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.