கொரோனாவின் எதிரொலி..யாழ்- பருத்தித்துறை 750 வழித்தட தனியார் பேருந்து சேவை இடைநிறுத்தம்!!

வெளிநாடு செல்வதற்காக விசா பெற்றுக் கொள்வதற்கு தனியார் வைத்தியசாலையில் PCR பரிசோதனை மேற்கொண்டவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.அக்மீமன, தொட்டகொட பஸ்மாழுவ பிரதேசத்தை சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதென காலி மாவட்ட பிரதேச தொற்று நோய் விஞ்ஞான பிரிவு வைத்தியர் வெனுர சிங்காராச்சி தெரிவித்துள்ளார்.


இந்த நபர் வெளிநாடு செல்வதற்கான எதிர்பார்ப்பில் இருந்த ஒருவராகும். அவர் விசா பெற்றுக் கொள்வதற்காக தனியார் வைத்தியசாலையில் பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அங்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.அதற்கமைய அவர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.இந்த நபர் கொழும்பு துறைமுகம், மினவாங்கொட ஆடை தொழிற்சாலை மற்றும் பேலியகொட மீன் சந்தை கொரோனா பரவல் ஒன்றிற்கும் தொடர்புப்படாதவர் என காலி மாவட்ட பிரதேச தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.இந்த நபரின் சகோதரர் சேனபுர புனர்வாழ்வு நிலையத்தில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பியவராகும். எனினும் இறுதி பரிசோதனையிலும் அவருக்கு கொரோனா தொற்றியிருக்கவில்லை.இந்த நிலையில் மீண்டும் PCR பரிசோதனை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.