கொரோனா நோயாளிகளுக்கு அறிகுறிகள் தென்படாதது மிகப் பெரிய அச்சுறுத்தல்!

கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்ட 6764 நோயாளர்களில் சுமார் ஆயிரத்து 297 பேருக்கே அந்த நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழுவின் தலைவர் மீ பென்ங் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.இது தொடர்பில் மேலும்,இதனடிப்படையில் கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளர்களில் 5 இல் 4 வீதமான நோயாளிகளுக்கு வைரஸ் தொற்றியமைக்கான அறிகுறிகள் தென்படவில்லை.இந்த நிலைமையானது கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதில் மிகப் பெரிய அச்சுறுத்தல்.அத்துடன் இது வைரஸ் பரவலை வேகப்படுத்தும் என்பதுடன் அது விரிவடைய காரணமாகவும் அமையும்.இதனால், பொதுமக்களை பரிசோதிப்பது மிகவும் முக்கியமானது என மீ பென்ங் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.