கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 67 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய கொ​ரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 4 ஆயிரத்து 142 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.நாட்டில் இதுவரையில் 9 ஆயிரத்து 205 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அவர்களில் 4 ஆயிரத்து 142 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ள நிலையில், 5 ஆயிரத்து 44 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.மேலும், இந்த வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் இதுவரையில் 19 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.